ஊடகங்கள் முன்பு பேசி என்ன பயன்? அமைச்சருக்கு காங்., - எம்.எல்.ஏ., கேள்வி
ஊடகங்கள் முன்பு பேசி என்ன பயன்? அமைச்சருக்கு காங்., - எம்.எல்.ஏ., கேள்வி
ஊடகங்கள் முன்பு பேசி என்ன பயன்? அமைச்சருக்கு காங்., - எம்.எல்.ஏ., கேள்வி
ADDED : ஜூன் 28, 2024 11:14 PM

துமகூரு: ''துணை முதல்வர் பதவி பற்றி ஊடகங்கள் முன் பேசினால் என்ன பயன்?'' என, அமைச்சர் ராஜண்ணாவுக்கு, காங்., - எம்.எல்.ஏ., ரங்கநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா. இவர், கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும் என, அவ்வப்போது ஊடகங்கள் முன் கருத்துத் தெரிவித்து வருகிறார். இவரது கருத்து கட்சிக்கும், ஆட்சிக்கும் பிரச்னை ஏற்படும் வகையில் உள்ளது. இதனால் அவரை முதல்வர் சித்தராமையா கண்டித்து உள்ளார்.
இந்நிலையில் குனிகல்காங்., -- எம்.எல்.ஏ., ரங்கநாத் நேற்று அளித்த பேட்டி:
முதல்வர், துணை முதல்வர் மாற்றம் குறித்து முடிவெடுக்க வேண்டியது கட்சி மேலிடம். இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசுவது வேடிக்கையாக உள்ளது. கர்நாடக பா.ஜ.,வில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன.
மாநில தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக, ஒரு கோஷ்டி செயல்பட்டு வருகிறது. அவர்கள் வீட்டில் முதலில் என்ன நடக்கிறது என்று பார்க்கட்டும். அதன் பின்னர் அடுத்தவர்கள் வீட்டை பார்க்கலாம்.
துணை முதல்வர் பதவி குறித்து, அமைச்சர் ராஜண்ணா ஊடகங்கள் முன் பேசுவதால் என்ன பயன்? முதல்வர், துணை முதல்வரை மாற்ற வேண்டும் என்று விரும்புவர்கள், ஊடகங்கள் முன் பேசாமல், டில்லி சென்று கட்சி மேலிட தலைவர்களிடம் பேச வேண்டும்.
முதல்வர் சித்தராமையா சிறப்பாக ஆட்சி செய்கிறார்.
இந்த அரசின் சிந்தனை ஏழைகளை பாதுகாப்பதில் தான் உள்ளது.
துணை முதல்வர் சிவகுமாருக்கு, முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று, மடாதிபதி சந்திரசேகர சுவாமிகள் பேசியது, அவரது தனிப்பட்ட கருத்து.
அவர் எங்கள் சமுதாயத்தின் மூத்த மடாதிபதி. நாங்கள் யாரும் சென்று அவரிடம் அப்படி பேசுங்கள் என்று கேட்கவில்லை. அவர் மனதில் பட்டதை கூறி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரங்கநாத், துணை முதல்வர் சிவகுமாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.