மோடியின் கையில் அழியாத மை என்ன ஆனது?: விரல் பிடித்து பார்த்த நிதீஷ்குமார்
மோடியின் கையில் அழியாத மை என்ன ஆனது?: விரல் பிடித்து பார்த்த நிதீஷ்குமார்
மோடியின் கையில் அழியாத மை என்ன ஆனது?: விரல் பிடித்து பார்த்த நிதீஷ்குமார்
UPDATED : ஜூன் 19, 2024 01:53 PM
ADDED : ஜூன் 19, 2024 12:48 PM

பாட்னா: லோக்சபா தேர்தலில் ஜனநாயக கடமை ஆற்றிய போது வைத்த மை, பிரதமர் மோடிக்கு அழிந்து விட்டதா என பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் பார்க்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பீஹார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில், கட்டப்பட்ட புதிய வளாகத்தை இன்று ( ஜூன் 19) பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், பீஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், 17 நாடுகளின் தூதர்கள், பல்கலை., பேராசிரியர் அபய் குமார் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி உடன் நிதீஷ் குமார் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, அவர் லோக்சபா தேர்தலில் ஜனநாயக கடமை ஆற்றிய போது வைத்த மை, பிரதமர் மோடிக்கு அழிந்து விட்டதா என பார்த்தார். பிரதமர் மோடியின் கையில் மை அழியாமல் இருந்தது. இதையடுத்து எனக்கு மை அழியவில்லை என நிதீஷ்குமார் கூறும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தேர்தலில் ஓட்டளிக்கும் போது வைக்கும் மை சில மாதங்களுக்கு அழியாமல் இருக்கும்.