பா.ஜ.,வினரின் கடின உழைப்புக்கு வெற்றி: அனுராக் தாக்கூர் பேட்டி
பா.ஜ.,வினரின் கடின உழைப்புக்கு வெற்றி: அனுராக் தாக்கூர் பேட்டி
பா.ஜ.,வினரின் கடின உழைப்புக்கு வெற்றி: அனுராக் தாக்கூர் பேட்டி
ADDED : ஜூன் 12, 2024 03:04 PM

சிம்லா: 'பா.ஜ.,வினரின் கடின உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 4 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றி, பா.ஜ., 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது' என பா.ஜ., எம்.பி அனுராக் தாக்கூர் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
ஹிமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் ஹமிர்பூர் தொகுதி எம்.பி., அனுராக் தாக்கூர் தலைமையில் பா.ஜ., ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிருபர்கள் சந்திப்பில் அனுராக் தாக்கூர் கூறியதாவது: மத்திய அமைச்சராக நட்டாவுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகள் குறித்து பார்லிமென்டில் தொடர்ந்து குரல் எழுப்புவோம். பா.ஜ.,வினரின் கடின உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது.
100 சதவீதம்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 4 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றி, பா.ஜ., 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது. 4 லோக்சபா எம்.பி.க்கள் மற்றும் 3 ராஜ்யசபா எம்.பி.,கள் உள்ளனர். எம்.பி.,யாக இருக்க எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். 3 முதல் 5 வருடங்களுக்கு ஒவ்வொருவருக்கும் புதிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.