Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு  நிர்வாக இயக்குனர், கணக்கு அதிகாரி கைது

வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு  நிர்வாக இயக்குனர், கணக்கு அதிகாரி கைது

வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு  நிர்வாக இயக்குனர், கணக்கு அதிகாரி கைது

வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு  நிர்வாக இயக்குனர், கணக்கு அதிகாரி கைது

ADDED : ஜூன் 02, 2024 06:03 AM


Google News
பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட நிர்வாக இயக்குனர், கணக்கு அதிகாரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஷிவமொகாவைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 52. பெங்களூரு வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் கண்காணிப்பாளராக இருந்தார். ஆணையத்திற்கு அரசு ஒதுக்கிய 187 கோடி ரூபாயில் இருந்து, 87 கோடி ரூபாயை, வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றி மோசடி நடந்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த மாதம் 27ம் தேதி சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டார்.

கடிதத்தில் ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் பத்மநாபா, கணக்கு அதிகாரி பரசுராம் துக்கண்ணவர் பெயர்களை குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவர்கள் இருவரையும் 'சஸ்பெண்ட்' செய்து, அரசு உத்தரவிட்டது.

எம்.எல்.ஏ., கடிதம்


ஆணையத்திற்கு அரசு ஒதுக்கிய 187 கோடி ரூபாயில், 89.62 கோடி ரூபாய் ஹைதராபாத்தில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில், வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கை, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு அரசு ஒப்படைத்தது.

இந்நிலையில், வழக்கு தொடர்பாக, நிர்வாக இயக்குனர் பத்மநாபா, கணக்கு அதிகாரி பரசுராம் துக்கண்ணவர், நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும், பெங்களூரு 42வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும், ஆறு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில் பண பரிமாற்றம் செய்யப்பட்ட, ஐ.டி., நிறுவனங்களின் வங்கிக்கணக்குகளை முடக்கும்படி, ரிசர்வ் வங்கிக்கு, பழங்குடியினர் நல துறை கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கடிதம் எழுதி உள்ளார். வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலும் கடிதம் எழுதி உள்ளார்.

கவர்னரிடம் புகார்


இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:

கர்நாடகாவின் பணத்தை, ஹைதராபாத்திற்கு அனுப்பியது ஏன்? அங்கும் காங்கிரஸ் அரசு இருப்பதால், இங்கு உள்ள பணத்தை அங்கு அனுப்பி உள்ளனரா? இந்த வழக்கில் ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் பங்கு உள்ளது.

அதிகாரி சந்திரசேகர் சாவுக்கு, முதல்வர் சித்தராமையாவும், அமைச்சர் நாகேந்திராவும் நேரடி காரணம். அவர்கள் பதவி விலக வேண்டும். அமைச்சரவையை நீக்கக்கோரி, கவர்னிடம் புகார் கடிதம் கொடுப்போம்.

எங்கள் ஆட்சியில் கான்டிராக்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்தபோது, அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா பற்றி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பேசினார். இப்போது நாகேந்திராவை பற்றி அவர் பேசாதது ஏன்? இந்த வழக்கு பற்றி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் எதுவும் பேசாமல் இருப்பது ஏன்; அவருக்கும் இந்த முறைகேட்டில் பங்கு உள்ளதா?

இவ்வாறு அவர்கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us