துப்பாக்கியால் சுட்டு உ.பி., வாலிபர் தற்கொலை
துப்பாக்கியால் சுட்டு உ.பி., வாலிபர் தற்கொலை
துப்பாக்கியால் சுட்டு உ.பி., வாலிபர் தற்கொலை
ADDED : ஜூலை 05, 2024 01:36 AM
ரோகினி:வடமேற்கு டில்லியின் ரோகினியில் உ.பி.,யை சேர்ந்த ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரோகினியின் செக்டார் 17ல் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 8:40 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு கே.என்., கட்ஜு மார்க் போலீசார் விரைந்தனர். அங்கு 30 வயதுடைய நபர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் உத்தர பிரதேசத்தின் பரேலியில் வசிக்கும் சுனில் தாக்கூர், 30, என்பது தெரிய வந்தது.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து தற்கொலைக்கு முன் சுனில் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.