ADDED : ஜூலை 06, 2024 10:20 PM
புதுடில்லி:டில்லி பல்கலையில், மதிப்பெண் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழில் தவறுகளை திருத்தம் செய்யும் கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெற்ற நாளிலிருந்து 6 ஆண்டுகளுக்குள் மதிப்பெண் பட்டியலில் திருத்தம் கோரினால், 500 ரூபாயாக இருந்த கட்டணம் 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு மேல் 2,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே முன்பு ஆயிரம் ரூபாயாக இருந்தது.
ஆறு ஆண்டுகளுக்குள் பட்டப் படிப்புச் சான்றிதழில் திருத்தம் செய்ய 500 ரூபாயாக இருந்த கட்டணமும் 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கும் மேல் எனில், 2,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
அதேபோல, மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டப் படிப்புச் சான்றிதழ் தொலைந்து விட்டால், நகல் பெற 500 ரூபாயாக இருந்த கட்டணமும் ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வுக்கு கடந்த 4ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.