பத்ராவதி இரும்பு தொழிற்சாலையில் மத்திய அமைச்சர் குமாரசாமி ஆய்வு
பத்ராவதி இரும்பு தொழிற்சாலையில் மத்திய அமைச்சர் குமாரசாமி ஆய்வு
பத்ராவதி இரும்பு தொழிற்சாலையில் மத்திய அமைச்சர் குமாரசாமி ஆய்வு
ADDED : ஜூன் 30, 2024 11:55 PM

ஷிவமொகா : ''பத்ராவதி விஸ்வேஸ்வரய்யா இரும்பு தொழிற்சாலையை புனரமைப்பது குறித்து வரும் நாட்களில் முடிவு செய்யப்படும்,'' என மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
ஷிவமொகா மாவட்டம், பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு ஆலையை நேற்று, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி பார்வையிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
இத்தொழிற்சாலை காப்பாற்றப்பட வேண்டும் என்று அனைவரும் கருதினர். எனவே, தொழிற்சாலை குறித்த முழுமையான தகவல்களை, எஸ்.ஏ.ஐ.எல்., எனும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் தலைவர் அமரேந்திர பிரகாஷ், தொழிலாளர்கள் தங்கள் அனுபவங்களை தெரிவித்தனர்.
தற்போது லோக்சபா கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதனால் சில முடிவுகளை பகிரங்கமாக வெளியிட முடியாது.
ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி., ஜெயராம் ரமேஷ், நான் பதவியேற்ற போது, ஐந்து கேள்விகளை முன்வைத்தார். அதற்கான தகவல் அறிய பத்ராவதி வந்தேன். தொழிற்சாலை, தொழிலாளர்களை காப்பாற்ற விரைவில் முடிவெடுப்பேன்.
இத்தொழிற்சாலை, 1998ல் எஸ்.ஏ.ஐ.எல்.,லில் சேர்க்கப்பட்டது. ஆத்ம நிர்பார் பாரத், மேக் இன் இந்தியா ஆகியவற்றில் பிரதமர் நம்பிக்கை கொண்டுள்ளார். 2030க்குள் நம் நாட்டில் 300 மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளனர். இந்த இலக்கை எட்டுவதற்கு என்னென்ன செயல் திட்டம் வகுக்கலாம் என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
நஷ்டத்தில் இயங்கும் தொழிற்சாலை என்ற முத்திரையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நிரந்தர தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது லோக்சபா கூட்டத்தொடர் நடந்து வருவதால், தொழிற்சாலை குறித்து எந்த அறிவிப்பையும் என்னால் வெளியிட முடியாது. வரும் நாட்களில் தொழிற்சாலையின் அனைத்து அம்சங்களையும் மனதில் கொண்டு, தொழிற்சாலையை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து யோசிப்போம்.
பத்ராவதியில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கோரிக்கைகள் உள்ளன. தொழிற்சாலையின் சொத்துகளை பாதுகாக்கும் வகையில், தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்தும் முடிவெடுக்க உள்ளோம்.
தொழிற்சாலையை காப்பாற்ற ராமதுர்கா சுரங்கத்தில் முதல் முயற்சி துவங்கி உள்ளது. இன்னும் சில நாட்களில் பதில் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.
1_DMR_0005
விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலையை, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி பார்வையிட்டார். இடம்: பத்ராவதி, ஷிவமொகா.