டில்லி மக்களுக்கு மத்திய அரசு அநீதி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு
டில்லி மக்களுக்கு மத்திய அரசு அநீதி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு
டில்லி மக்களுக்கு மத்திய அரசு அநீதி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 25, 2024 11:59 PM

புதுடில்லி:“மத்திய பட்ஜெட்டில் டில்லிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது,”என, நிதி அமைச்சர் அதிஷி சிங் கூறினார்.
டில்லி நிதி அமைச்சர் அதிஷி நேற்று கூறியதாவது:
மத்திய பட்ஜெட்ட்டில் தேசிய தலைநகர் பிராந்திய மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். டில்லி மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வருமான வரி வடிவில் மத்திய அரசுக்கு வழங்கினர். ஆனால், பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் டில்லிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 - 20-23 நிதியாண்டில் டில்லி மக்கள் 2.12 லட்சம் கோடி வருமான வரி செலுத்தியுள்ளனர். ஆனால், மத்திய அரசு டில்லிக்கு வெறும் 1,168 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது மொத்த வரித்தொகையில் 0.4 சதவீதம்தான்.
கடந்த 10 ஆண்டுகளில் டில்லி மக்கள் 15.59 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளனர். ஆனால், மத்திய அரசு வெறும் 7,534 கோடி ரூபாய் மட்டுமே டில்லிக்கு வழங்கியுள்ளது. இது டில்லி மக்கள் செலுத்திய தொகையில் 0.48 சதவீதம் மட்டுமே.
நடப்பு 2024 - 20-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தேசிய தலைநகர் பிராந்திய அரசுக்கு கடந்த 2023 - 20-24ம் நிதியாண்டில் ஒதுக்கிய 1,168 கோடி ரூபாயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுவே, 2022 - 20-23ம் ஆண்டில் 960 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை 2023- - 2024ல் 1,168 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு 20,000 கோடி ரூபாய் கேட்டிருந்தும், மத்திய அரசு செவிசாய்க்காமல், டில்லி மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது.