பாம்பு பிடிப்போருக்கு இரண்டு நாள் பயிற்சி
பாம்பு பிடிப்போருக்கு இரண்டு நாள் பயிற்சி
பாம்பு பிடிப்போருக்கு இரண்டு நாள் பயிற்சி
ADDED : ஜூன் 14, 2024 07:42 AM
பெங்களூரு: பாம்பு பிடிப்போருக்கு, பெங்களூரு பன்னர்கட்டா பூங்காவில் வரும் 19, 20 ம் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெங்களூரு பன்னர் கட்டா தேசிய பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள, பாம்பு பிடி வீரர்களின் திறமையை மேம்படுத்த வரும் 19, 20ம் தேதிகளில், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பாம்புகளை பாதுகாப்பது, பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.
https://forms.gle/ மற்றும் https://bit.ly/kfdswblr என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.