Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தொழிலதிபரை கடத்தி ரூ.5 கோடி பறிக்க முயன்ற இருவர் கைது

தொழிலதிபரை கடத்தி ரூ.5 கோடி பறிக்க முயன்ற இருவர் கைது

தொழிலதிபரை கடத்தி ரூ.5 கோடி பறிக்க முயன்ற இருவர் கைது

தொழிலதிபரை கடத்தி ரூ.5 கோடி பறிக்க முயன்ற இருவர் கைது

ADDED : ஜூன் 30, 2024 11:49 PM


Google News
ஹலசூரு: தொழில் அதிபரை கடத்தி 5 கோடி ரூபாய் பறிக்க முயன்ற வழக்கில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தெலுங்கானாவை சேர்ந்தவர் அஜ்மீர் ராஜு, 30. தொழிலதிபரான இவர் தனியார் நிறுவனம் நடத்தினார். தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், பணத்தை இரட்டிப்பாகி தருவதாக கூறி பலரிடம், பண மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டிற்கு தப்பி சென்றார்.

கடந்த ஆண்டு ஐ.பி.எல்.,கிரிக்கெட் போட்டி பார்க்க, பெங்களூரு வந்த போது தெலுங்கானா போலீசார் அவரை கைது செய்தனர்.சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ஜாமினில் வந்தார்.

அதன்பின் பெங்களூரு எம்.ஜி., ரோட்டின் அருகே, வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்.16ம் தேதி இரவு, நண்பரான சாத்விக் என்பவருடன், பைக்கில் வெளியே சென்றார்.ட்ரினிட்டி மெட்ரோ ரயில் நிலையம் அருகே, மைக்கை வழிமறித்த கும்பல், அஜ்மீர் ராஜுவை காரில் கடத்தி சென்றது.

இதுகுறித்து ஹலசூரு போலீசில் சாத்விக் புகார் செய்தார். போலீசார் நடத்தி விசாரணையில், அஜ்மீர் ராஜுவை, அந்த கும்பல் தெலுங்கானா கடத்தி சென்றது தெரிந்தது.

கடந்த 20ம் தேதி, அஜ்மீர் ராஜு மீட்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் 5 கோடி ரூபாய் கேட்டு கும்பல் மிரட்டியதாக கூறினார்.

இந்நிலையில் அஜ்மீர் ராஜுவை கடத்தியதாக, ஆந்திராவை சேர்ந்த அன்னப்பா, 50, ஆனந்த், 45 ஆகிய இரண்டு பேரை, நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us