தர்ஷனை காப்பாற்ற முயற்சி? பா.ஜ., துணை தலைவர் எதிர்ப்பு!
தர்ஷனை காப்பாற்ற முயற்சி? பா.ஜ., துணை தலைவர் எதிர்ப்பு!
தர்ஷனை காப்பாற்ற முயற்சி? பா.ஜ., துணை தலைவர் எதிர்ப்பு!
ADDED : ஜூன் 18, 2024 06:28 AM

சாம்ராஜ்நகர்: ''நடிகர் தர்ஷன் செய்திருப்பது, சாதாரண விஷயம் அல்ல. இவரை காப்பாற்ற, அமைச்சர்கள் முயற்சிக்க கூடாது,'' என மாநில பா.ஜ., துணை தலைவர் மகேஷ் வலியுறுத்தினார்.
சாம்ராஜ் நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தான் ஆஜானுபாகு என்பதை, தன் ரசிகர் ரேணுகாசாமியிடம் தர்ஷன் காண்பித்துள்ளார். இவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். இவருக்கு ஆதரவாக முதல்வர் இல்லாதது வரவேற்கத்தக்கது.
தர்ஷன் செய்திருப்பது, சாதாரண செயல் அல்ல. அவரை காப்பாற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முயற்சிக்க கூடாது. போலீசாரும், செல்வாக்கு மிக்கவர்களின் பேச்சை கேட்க கூடாது.
பாதிக்கப்பட்ட ரேணுகாசாமியின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரசிகர் தற்கொலை
ராம்நகர் சென்னபட்டணா மாளேதொட்டி கிராமத்தில் வசித்தவர் பைரேஷ், 45. இவர் நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர். கொலை வழக்கில், தர்ஷன் சிக்கியதால், பைரேஷ் மிகவும் வருத்தம் அடைந்தார். சரியாக சாப்பிடுவதும் இல்லை; உறங்குவதும் இல்லை.
நேற்று மதியம் இவர், சாக்கடையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தர்ஷனை, போலீஸ் கஸ்டடிக்கு அழைத்து சென்ற நாளில் இருந்து, பைரேஷ் சாப்பிடாமல் இருந்ததால், சோர்வடைந்து சாக்கடையில் விழுந்து இறந்திருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர்.