திகார் சிறையில் மோதல் பழிக்குப்பழியாக கொலை
திகார் சிறையில் மோதல் பழிக்குப்பழியாக கொலை
திகார் சிறையில் மோதல் பழிக்குப்பழியாக கொலை
ADDED : ஜூன் 22, 2024 01:34 AM
ஜஹாங்கிர்புரி: திகார் சிறையில் இருந்தபோது ஏற்பட்ட மோதலுக்கு பழிவாங்குவதற்காக ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜஹாங்கிர்புரியைச் சேர்ந்தவர் மொய்துல். இவரை கடந்த 6ம் தேதி பட்டப்பகலில் ஒருகும்பல் கொடூரமாக கொலை செய்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
அன்று இரவு 15 வயது சிறுவனை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தனர். அவன் கொடுத்த தகவலின்பேரில், மங்கோல்புரியில் பதுங்கியிருந்த ஜிதேந்தர், 26, ரோஹித் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஜிதேந்தர் மீது கொலை முயற்சி, கொள்ளை, சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஜிதேந்தருக்கும் மொய்துலுக்கும் சண்டை ஏற்பட்டது.
அப்போது, ஜிதேந்தரை மொய்துல் கூர்மையான ஆயுதத்தால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்துக்கு பழிவாங்க அவரை ஜிதேந்தர் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.