ஏ.டி.எம்.,மில் ரூ.20 லட்சம் திருடிய மூன்று பேர் கைது
ஏ.டி.எம்.,மில் ரூ.20 லட்சம் திருடிய மூன்று பேர் கைது
ஏ.டி.எம்.,மில் ரூ.20 லட்சம் திருடிய மூன்று பேர் கைது
ADDED : ஜூன் 08, 2024 04:56 AM
விவேக் நகர், : ஏ.டி.எம்.,மில் 20 லட்சம் ரூபாயை திருடிய, ஆந்திராவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, விவேக்நகர் விக்டோரியா லே - அவுட்டில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது.
கடந்த மாதம் 31ம் தேதி இரவு, ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பும், பாஸ்வேர்ட் எண்ணை பயன்படுத்தி, மர்ம நபர்கள் 20 லட்சம் ரூபாயை திருடினர்.
விவேக்நகர் போலீசார் நடத்திய விசாரணையில், ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும் நிறுவனத்தின் ஊழியர்கள் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.
அந்த ஏ.டி.எம்.,மில் செக்யூரிட்டி வேல்யூ இந்தியா என்ற நிறுவனத்தினர், பணம் நிரப்பினர். இதனால் அங்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது.
பணம் நிரப்பும் பொறுப்பு, ஆந்திராவின் அனந்தபூரின் கலு வெங்கடேஷ், 35, என்பவர் கட்டுப்பாட்டில் இருப்பதும், அவர் விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்ததும் தெரியவந்தது.
நேற்று முன்தினம் அனந்தபூர் சென்ற விவேக்நகர் போலீசார், கலு வெங்கடேஷை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், அனந்தபூரின் முரளி மோகன், 27, பொட்டலு சாஹி தேஜா, 28, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கலு வெங்கடேஷ் வேலை செய்யும் நிறுவனத்தில், முரளி மோகன் வேலை செய்தார். கடந்த 2022ல் அவர் வேலையை விட்டு விலகினார். ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பச் செல்லும், இருவரிடம் 12 இலக்க எண் கொண்ட, பாஸ்வேர்ட் கொடுக்கப்படும்.
இதில் தலா ஆறு எண்கள், கலு வெங்கடேஷ், முரளி மோகனும் தெரியும். அதை பயன்படுத்தி பணம் திருடியது தெரிந்தது. முரளி மோகனுக்கு உடந்தையாக இருந்ததால், பொட்டலு சாஹி தேஜாவும் சிக்கி உள்ளார்.