'முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் திட்டமில்லை'
'முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் திட்டமில்லை'
'முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் திட்டமில்லை'
ADDED : ஜூலை 26, 2024 12:16 AM

புதுடில்லி: 'முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணைக் கட்டும் திட்டம் எதுவும் இல்லை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக சமீபத்தில் கேரள அரசு புகார் கூறியது.
இந்த அணை 128 ஆண்டுகள் பழமையானது இந்த அணை இடிந்தால், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூன்று அணைகள் பாதிக்கப்படும் எனக் கூறிய கேரள அரசு, புதிய அணை கட்டுவதே இதற்கு தீர்வு என தெரிவித்திருந்தது.
முல்லை பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையையும் அம்மாநில அரசு தயார் செய்தது.
இதற்கான பணிகளையும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், லோக்சபாவில், 'முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணைக் கட்ட நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா?' என, கேரள எம்.பி., நேற்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி கூறியதாவது:
அணைகளின் பாதுகாப்பு என்பது அணையின் உரிமையாளர்களான மாநில அரசுகளின் வசமே உள்ளது. முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரை தமிழக அரசின் நீர்வளத் துறை, ஆண்டுதோறும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அணையின் ஒட்டுமொத்த நிலை மற்றும் கட்டமைப்பு திருப்திகரமாக உள்ளதாக மத்திய குழுவும் தெரிவித்துள்ளது. எனவே, முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்டும் திட்டம் எதுவும் இல்லை. அதேசமயம், அணையின் நீர்மட்டத்தை தற்போதைய நிலையில், 152 அடியாக உயர்த்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.