உள்ளாட்சி தேர்தல்கள் முறையில் மாற்றமில்லை
உள்ளாட்சி தேர்தல்கள் முறையில் மாற்றமில்லை
உள்ளாட்சி தேர்தல்கள் முறையில் மாற்றமில்லை
ADDED : ஜூலை 05, 2024 06:24 AM
பெங்களூரு: நகர்ப்புற, உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களை தற்போதைய நடைமுறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, சட்டசபை விவகார அமைச்சர் எச். கே. பாட்டீல் அளித்த பேட்டி:
அனைத்து நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களை, கர்நாடக நிர்வாக சீர்திருத்தத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நீதிபதி பக்தவச்சலா கமிஷன் அளித்த பரிந்துரையை கைவிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நகர்ப்புற, உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களை தற்போதைய நடைமுறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் காலத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 4,563 அரசு மருத்துவமனைகளுக்கு 2,964.20 கோடி ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்கள் வாங்க, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 256.15 கோடி ரூபாய் செலவில் கானாபுரா, நெலமங்களா, சிருங்கேரி உட்பட ஏழு தாலுகாக்களில், புதிய மருத்துவமனை கட்டப்படுகிறது. கிராமப்புறங்களில் சுகாதார அமைப்பை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக தேர்வுகள் ஆணையத்தின் தற்போதைய கட்டடத்தை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.