பீஹாரில் பாலம் இடிந்தது ஒரே வாரத்தில் 4வது சம்பவம்
பீஹாரில் பாலம் இடிந்தது ஒரே வாரத்தில் 4வது சம்பவம்
பீஹாரில் பாலம் இடிந்தது ஒரே வாரத்தில் 4வது சம்பவம்
ADDED : ஜூன் 28, 2024 12:53 AM
கிஷண்ஞ்ச், பீஹார் மாநிலம் கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் பாயும் கங்கை நதியை மஹாநந்தா நதியுடன் இணைக்கும் துணை நதியான மடியாவின் குறுக்கே, 70 மீட்டர் நீளத்துக்கு பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கடந்த 2011ல் கட்டப்பட்ட இந்த பாலம், பஹதுார்கஞ்ச் மற்றும் திகால்பங்க் நகரங்களை இணைக்கிறது.
நேற்று இந்த ஆற்றில் திடீரென வெள்ளம்அதிகரித்ததால் பாலத்தின் சில துாண்கள் இடிந்து ஆற்றில் விழுந்தன.
அதிர்ஷ்டவசமாக பாலம் இடிந்தபோது அருகே யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பாலம் இடிந்தது குறித்து அறிந்த பஹதுார்கஞ்ச் போலீசார் விரைந்து சென்று பாலத்தின் இரு பகுதிகளிலும் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை தடை செய்தனர்.
இதன் வாயிலாக பீஹாரில் ஒரே வாரத்தில் நான்காவது பாலம் இடிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலம் இடிந்தது குறித்து கலெக்டர் துஷார் சிங்கலா கூறுகையில், “நீர்ப்பிடிப்பு பகுதியான நேபாளத்தில் கனமழை பெய்ததால் ஆற்றில் திடீரென நீர்மட்டம் அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலத்தின் துாண்கள் இடிந்து விழுந்துள்ளன,” என்றார்.