பழி வேறு பக்கம்!
பெரிய தேர்தலில் ப.பேட்டையிலும், முல்பாகலிலும் ஓட்டு கொறஞ்சதால தான் தோற்றதாக கை வேட்பாளர் தெரிவிச்சாரு. இதற்கு ப.பேட்டை அசெம்பிளிக்காரர் உண்மையை ஒத்துக்காம, வேட்பாளர் வெளி மாநிலத்துக்காரர் என்று எதிர் தரப்பினர் பலமாக பிரசாரம் செய்துட்டாங்க. அதனால ஓட்டு வராம போச்சு. இது ஒருபுறம்.
வீடுகள் சொந்தம் ஆகுமா?
கடந்த நான்கு ஆண்டுகளில், 4.21 கோடி வீடுகளை ம.அரசு கட்டிக் கொடுத்தாங்க. இதில் கோல்டு சிட்டியில் ஒரு வீட்டை கூட கட்டி கொடுக்கலை. இத்தனைக்கும் கோல்டு மாவட்டத்தின் செங்கோட்டை உறுப்பினரா இருந்தவரே மத்திய ஆளுங்கட்சியான பூக்கட்சிக்காரர் தான்.
கட்சி ஆபீஸ் உருவாகுமா?
கை கட்சிக்கென ஆபீஸ் ஏற்படுத்த ரா.பேட்டை அரசு மருத்துவமனை அருகே 120க்கு 60 சைஸ் மனையை 40 ஆண்டுக்கு முன்னாடி வாங்கினாங்க. இதை சில தலைவர்கள் ஆட்டைய போட திட்டம் போட்டாங்க. ஆனா, தோல்வி தான். கட்சியின் சொத்து என்பதை உறுதிப்படுத்தி, பட்டா தயார்படுத்தினாங்க.
அடுத்த தலைவர் யார்?
கோல்டன் முனிசி., தலைவர் தேர்தலில் பூ, புல்லுக்கட்டு, நீலக்கொடி ஒண்ணா கூட்டணி வச்சாலும் 'கை' அமுக்கி விடும். மொத்தமுள்ள 35 கவுன்சிலர்களில் பூ 3, புல்லுக்கட்டு 1, நீலம் 1 ஆக இந்த கூட்டணியில 5 பேர் தான்.