Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

ADDED : ஜூன் 02, 2024 05:53 AM


Google News
பதவி மோகம்

கோல்டு மைன்ஸ் சிறப்பு அதிகாரியின் பணிக்காலம் முடிவடைய போகுது. அவரே மேலும் ஆறு மாதங்கள் நீடிக்க, செங்கோட்டை வரை சிபாரிசுகள் சென்றுள்ளன. இவரால் தான் வசிக்கும் வீடுகளுக்கு, 'பொசிஷன் சர்ட்டிபிகேட்' கிடைச்சதாக தொழிலாளர்களில் ஒரு சாரார் ஸ்ட்ராங்காக 'பில்டப்' செய்றாங்க.

வீடுகளை சொந்தம் ஆக்கி பதிவு செய்து கொடுக்கும் வரையில், அவரே பதவியில் நீடிக்க வேண்டுமென, ஒரு தரப்பினர் துாபம் போட்டு வர்றாங்க.

அண்ணன் எப்போ போவார்; திண்ணை எப்போ காலியாகும் என சிலர், அந்த பதவிக்காக காத்திருக்காங்க. இப்பதவியின் அருமை பெருமைகள் அறிந்த, கைதேர்ந்த நபர்கள் சிபாரிசு என்ற பெயரில் செங்கோட்டை வரை துாது அனுப்பியிருக்காங்க.

மைன்ஸ் சொத்துகளை சூறையாடியவர்கள், பதவி மோகத்தில் அலையிறாங்களாம். இதன் முடிவு, ஓரிரு மாதங்களில் தெரிய போகுது.

மதிப்பிழந்த புல்லுக்கட்டு

புல்லுக்கட்டு கட்சியை, அதன் தொண்டர்கள் வளர்க்குறாங்களோ இல்லையோ, அதன் கூட்டணியான பூ கட்சியில, பலர் முழுசா நனைஞ்சிட்டாங்க. அது தான், பாதுகாப்பான இடமென செயல் படுறாங்க.

பூவின் வாசம் இருந்தால் மட்டுமே, ஊரில் கவுன்சிலர் ஆக முடியுமுன்னு தெரிஞ்சிக்கிட்டாங்களாம். பெயரவில் தான் புல்லுக்கட்டு கட்சியாம்.

பெர்ர்ய தேர்தலில் புல்லுக்கட்டு வேட்பாளர் இருந்தாலும், பூ கட்சியினர் தலைமையில் தான் தலை அசைச்சாங்களாம். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின்னரே, யார் எங்கு இருப்பர் என தெரிய வரும்.

பல பூத்களுக்கு, புல்லுக்கட்டுக்காரர்களுக்கு பணம் போய் சேராததால், அவர்கள் கை பக்கம் போன கதை எல்லாம் இப்போ வெளிச்சத்துக்கு வருது.

கண்துடைப்பு நாடகம்

பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள், சீருடைகள் விற்பனை செய்ய கூடாதுன்னு, மாவட்ட கல்வி ஆபீசர் பேச்சளவில் சொன்னாரே தவிர, அதிகார பூர்வ சுற்றறிக்கையாக அனுப்பவில்லை.

தனியார் பள்ளிகளின் முறைகேடுகளுக்கு யார் யார் பக்க பலமாக இருக்காங்க என்பது தெரிய வந்திருக்குது. வசூல் வேட்டை நடத்தவே வந்ததாகவே, விபரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க.

அரசு நிர்ணயித்த அட்மிஷன் கட்டணம், கட்டாயப்படுத்தி டொனேஷன் வாங்கக்கூடாது என்பதையும், நோட்டு புத்தகங்கள் விற்கப்படாது என்பதையும் வலியுறுத்தலயாம்.

'விசாரணை விசிட்' என்பது ஒரு கண் துடைப்பு நாடகம் என புகார் செஞ்சவங்களே சொல்றாங்க.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us