Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ரஷ்யாவில் பயங்கரவாத தாக்குதல்: போலீசார் உட்பட 19 பேர் பலி

ரஷ்யாவில் பயங்கரவாத தாக்குதல்: போலீசார் உட்பட 19 பேர் பலி

ரஷ்யாவில் பயங்கரவாத தாக்குதல்: போலீசார் உட்பட 19 பேர் பலி

ரஷ்யாவில் பயங்கரவாத தாக்குதல்: போலீசார் உட்பட 19 பேர் பலி

ADDED : ஜூன் 24, 2024 11:29 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாஸ்கோ: ரஷ்யாவில் தாகேஸ்டன் மாகாணத்தின் இரண்டு நகரங்களில் உள்ள தேவாலயம், யூத வழிப்பாட்டு தலங்கள் மற்றும் போலீஸ் நிலையம் மீதும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 15 போலீசார் உட்பட 19 பேர் பலியாகினர். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ரஷ்யாவின் தாகேஸ்டன் மாகாணத்தில் உள்ள மஹாச்கலா மற்றும் டெர்பன்ட் ஆகிய நகரங்களுக்குள் நேற்று முன்தினம் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்கள் பலர் உள்ளே நுழைந்து அங்கு கூடியிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக சுடத்துவங்கினர்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள், அந்நகரங்களில் உள்ள தேவாலயம், யூத வழிப்பாட்டு தலங்கள் மற்றும் போலீஸ் நிலையத்தின் மீது குறிவைத்து தாக்குதல்களை அரங்கேற்றினர்.

இந்த தாக்குதலில், 15 போலீசார் உட்பட 19 பேர் பலியாகினர். இதேபோல் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து ரஷ்யாவின் தேசிய பயங்கரவாத தடுப்புப் பிரிவு கூறுகையில், 'இது திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். எனினும், இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

'இத்தகைய சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. இந்த தாக்குதல் நடத்தியவர்கள் பற்றியும், எதற்காக நடத்தப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்' என, குறிப்பிட்டுள்ளது.

தாகேஸ்டன் மாகாண கவர்னர் மெலிகோவ் கூறுகையில், “அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர பயங்கரவாத தாக்குதல் கண்டனத்துக்குரியது. சமூகத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்க நடத்தப்பட்ட சதி. தற்போது, இரண்டு நகரங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

“தாக்குதலில் பலியான அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ரஷ்ய நாட்டு கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, வரும் 26ம் தேதி வரை துக்க தினம் கடைப்பிடிக்கப்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன,” என்றார்.

மூன்று மாதங்களுக்கு முன், மாஸ்கோவில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட தாக்குதலில், 145 பேர் உயிரிழந்தனர். அதன்பின் ரஷ்யாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us