சிவலிங்கத்துடன் தனக்கும் அபிஷேகம் செய்ய வைத்த தேஜ்
சிவலிங்கத்துடன் தனக்கும் அபிஷேகம் செய்ய வைத்த தேஜ்
சிவலிங்கத்துடன் தனக்கும் அபிஷேகம் செய்ய வைத்த தேஜ்
ADDED : ஜூலை 08, 2024 11:59 PM

பாட்னா : பீஹாரில் உள்ள ஒரு கோவிலில் சிவலிங்கத்தை கட்டியணைத்தபடி இருந்த, முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாபுக்கு, அகோரி ஒருவர் பாலாபிஷேகம் செய்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரின் எதிர்க்கட்சியான, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். இவரது மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், அவ்வப்போது ஆன்மிகம் தொடர்பான நிகழ்வில் பங்கேற்பதை, வீடியோக்களாக தன் சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், சமீபத்தில் நடந்த பூஜையின் போது, சிவலிங்கத்தை கட்டியணைத்தபடி அவர் அபிஷேக ஆராதனையில் பங்கேற்ற வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில், 'உண்மையின் இறுதிச் சின்னம் மஹாதேவ். அவரை அரவணைப்பது, நம் ஆழமான உணர்வுகளை தழுவுவது போன்றது. குழப்பங்களுக்கு நடுவே அமைதியைக் காண மஹாதேவனே சரணாகதி' என, குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தேஜ் பிரதாப், சிவலிங்கத்தை கட்டியணைத்தபடி உள்ளார். சிவலிங்கத்துக்கும், தேஜ் பிரதாபுக்கும், அகோரி ஒருவர் விதவிதமான புனித நீர் மற்றும் பாலை எடுத்து அபிஷேகம் செய்கிறார்.
இந்த வீடியோ, பீஹார் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஹோலி பண்டிகையின் போது, கிருஷ்ணர் வேடமணிந்து விழாவில் பங்கேற்ற வீடியோவை தேஜ் பிரதாப் வெளியிட்டிருந்தார்.