25 எம்.பி.,க்களை கொடுத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழகம் பெயர் இருந்திருக்கும்: அன்புமணி சமாளிப்பு
25 எம்.பி.,க்களை கொடுத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழகம் பெயர் இருந்திருக்கும்: அன்புமணி சமாளிப்பு
25 எம்.பி.,க்களை கொடுத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழகம் பெயர் இருந்திருக்கும்: அன்புமணி சமாளிப்பு
UPDATED : ஜூலை 24, 2024 06:24 PM
ADDED : ஜூலை 24, 2024 01:30 PM

சென்னை: 'மத்திய பட்ஜெட்டில் தமிழகம் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றால் 25 தொகுதிகளில் ஜெயிக்க வைத்திருக்க வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், அன்புமணி கூறியதாவது: பட்ஜெட்டில் எல்லா மாநிலங்களின் பெயர்களை சொல்ல முடியாது. இந்தியாவிற்கு பொதுவானது தான் பட்ஜெட்.
25 தொகுதிகள்
பட்ஜெட்டில் தமிழகம் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றால் 25 தொகுதிகளிலும் ஜெயிக்க வைத்திருக்க வேண்டும். இன்னும் ஒரு சில நாட்களில் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எவ்வளவு ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவாக சொல்கிறேன். துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து தகவல் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.