'எடியூரப்பா மீது புகார் கூறிய பெண் மரணத்தில் சந்தேகம்'
'எடியூரப்பா மீது புகார் கூறிய பெண் மரணத்தில் சந்தேகம்'
'எடியூரப்பா மீது புகார் கூறிய பெண் மரணத்தில் சந்தேகம்'
ADDED : ஜூன் 06, 2024 10:08 PM

சித்ரதுர்கா: ''எடியூரப்பா மீது பாலியல் புகார் கூறிய பெண் மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது,'' என்று, பா.ஜ., முன்னாள் அமைச்சர் கூலிஹட்டி சேகர் 'பகீர்' குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
பா.ஜ., முன்னாள் அமைச்சர் கூலிஹட்டி சேகர், சித்ரதுர்காவில் நேற்று அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்து இருப்பதால், அமைச்சர் நாகேந்திரா பதவி விலக வேண்டும் என்று, பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தினர். தற்போது, அவர் ராஜினாமா செய்துள்ளார்.
ஆனால், பா.ஜ., ஆட்சியின் போது, போவி மேம்பாட்டு ஆணையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டது. சமூக நலத்துறை அமைச்சராக இருந்த, கோட்டா சீனிவாஸ் பூஜாரிக்கும் அதில் பங்கு உண்டு. இதுபற்றி முதல்வராக இருந்த, பசவராஜ் பொம்மை கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் விசாரணை நிறுத்தப்பட்டது. அந்த வழக்கை சி.பி.ஐ., - சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைக்க கூடாது. நீதிபதி தலைமையில், விசாரணை நடத்த வேண்டும்.
நேர்மையான அரசியல்வாதி என்று கூறப்படும் கோட்டா சீனிவாஸ் பூஜாரி, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற 60 கோடி ரூபாய், செலவு செய்து உள்ளார். அந்த பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது. எம்.பி.,யாக இருந்த பிரஜ்வல் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணை நடக்கிறது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதும் பெண் ஒருவர், பாலியல் புகார் அளித்தார். அதுபற்றி ஏன் விசாரிக்கவில்லை. புகார் அளித்த பெண் மரணம் அடைந்து உள்ளார். அவர் மரணத்தில், எனக்கு சந்தேகம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.