போலீஸ் இன்ஸ்பெக்டரை கடித்த தெருநாய் மரணம்
போலீஸ் இன்ஸ்பெக்டரை கடித்த தெருநாய் மரணம்
போலீஸ் இன்ஸ்பெக்டரை கடித்த தெருநாய் மரணம்
ADDED : ஜூலை 02, 2024 09:36 PM
சாம்ராஜ் நகர் : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று பேரை கடித்த தெரு நாய், தானாகவே இறந்த சம்பவம், சாம்ராஜ்நகரின், குண்டுலுபேட் போலீஸ் நிலையத்தில் நடந்துள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் போலீஸ் நிலையம் அருகில், ஒரு தெரு நாய் நீண்ட ஆண்டுகளாக சுற்றி வந்தது. போலீசாரே, அந்த நாய்க்கு அவ்வப்போது உணவு அளித்து வந்தனர்.
சமீபத்தில், அந்த நாயை, வேறொரு வெறி நாய் கடித்ததால், தடுப்பூசியும் போடப்பட்டது. இதற்கிடையில், மொபைல் போன் காணவில்லை என, ஒரு ஆசிரியர், புகார் அளிப்பதற்கு நேற்று முன்தினம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.
அப்போது, பின் பகுதியில் இருந்து வந்த அந்த தெரு நாய், அவரது காலை கடித்து விட்டு ஓடியது. உடனே அவர், அரசு மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இது போன்று, புகார் அளிக்க நண்பருடன் வந்தவரையும் நாய் கடித்தது. அவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
பின்னர், இன்ஸ்பெக்டர் பரசிவமூர்த்தி, வந்தார். அவரையும் நாய் கடித்தது. அவருக்கு நேற்று முன்தினம் இரவு தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இன்ஸ்பெக்டரை நாய் கடித்ததால், மற்ற போலீசார், அந்த நாயை விரட்டினர்.
பிடிக்க முற்பட்டபோது, அந்த நாய் தானாகே கீழே சரிந்து இறந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.