Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கட்சிக்காக பணியாற்றாவிட்டால் பதவி கிடைக்காது நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் சிவகுமார் எச்சரிக்கை

கட்சிக்காக பணியாற்றாவிட்டால் பதவி கிடைக்காது நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் சிவகுமார் எச்சரிக்கை

கட்சிக்காக பணியாற்றாவிட்டால் பதவி கிடைக்காது நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் சிவகுமார் எச்சரிக்கை

கட்சிக்காக பணியாற்றாவிட்டால் பதவி கிடைக்காது நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் சிவகுமார் எச்சரிக்கை

ADDED : ஜூலை 21, 2024 07:08 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: ''காங்கிரசை வேரில் இருந்து பலப்படுத்தி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வையுங்கள். கட்சிக்காக பணியாற்றாவிட்டால் பதவி கிடைக்காது,'' என, மாநில காங்., தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார் எச்சரித்துள்ளார்.

பெங்களூரின், குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், மாநிலத்தின் அனைத்து பிளாக் மற்றும் மாவட்ட காங்., தலைவர்களுடன், துணை முதல்வர் சிவகுமார், நேற்று ஆலோசனை நடத்தினார்.

அவர் பேசியதாவது:

பணியாற்றாமல் கட்சியின் லெட்டர் ஹெட்டுக்காக, பதவி பெற்றுள்ளவர்களை, தயவு தாட்சண்யம் இன்றி துாக்கி எறிவோம். விரைவில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்கஉள்ளது.

கட்சியை வேரில் இருந்து பலப்படுத்தி, கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

தனிப்பட்ட பிரச்னைகள்


கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அன்யோன்யமாக பணியாற்ற வேண்டும். நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என, எம்.எல்.ஏ.,க்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது சரியல்ல.

உங்களின் தனிப்பட்ட பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், அதை ஓரங்கட்டி கட்சியின் நன்மையை கருதி, அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்.

சில இடங்களில் கட்சி பலவீனமாக உள்ளது. பல முறை எச்சரித்தும் தலைவர்கள் விழிப்படையவில்லை. இனி அவ்வப்போது எச்சரித்தபடி அமர்ந்திருக்க முடியாது. பணியாற்றாதவர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவோம்.

கட்சிக்கு சவால்


மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.அடுத்து வரும் பெங்களூரு மாநகராட்சி, மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல்கள், கட்சிக்கு சவாலாக இருக்கும்.

கட்சி வேட்பாளர்களை அதிக எண்ணிகையில் வெற்றி பெற வைத்து, உள்ளாட்சிகளின் ஆட்சியை கைப்பற்ற வேண்டும். இந்த விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை.

பெயருக்கு மட்டும் தலைவர், நிர்வாகிகளாக இருந்து கொண்டு, பூத் அளவில் கட்சியை பலப்படுத்தாவிட்டால், வரும் நாட்களில் பதவி கிடைக்காது.

ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளூர் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கருத்துகளை பெற்ற பின்னரே, பதவிகள் வழங்கப்படும்.

பணியாற்றாமல் கோஷ்டி பூசலில் ஈடுபடுவோருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது.

கட்சி நிர்வாகிகள் பதவியிலும் தொடர முடியாது.

அமைச்சரை சந்திக்க...


இனி அமைச்சர்கள் காங்கிரஸ் அலுவலகத்துக்கு, குறிப்பிட்ட நாட்களில் வருவர். உள்ளூர் அளவில் கட்சியில் உறுப்பினர்களை பதிவு செய்து கொண்டு, அமைச்சரை சந்திக்க அனுமதி அளிக்கப்படும்.

மழைக்காலம் தீவிரமடைந்து, வெள்ளப்பெருக்கு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்னை உள்ள இடங்களுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.

காலியாக உள்ள கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் நியமனம் விரைவில் துவங்கும். கட்சிக்காக பணியாற்றுவோரை அடையாளம் கண்டு, பதவி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us