பயங்கரவாதிகளை "தட்டி தூக்க" அதி நவீன ட்ரோன்: காஷ்மீரில் தேடுதல் வேட்டை
பயங்கரவாதிகளை "தட்டி தூக்க" அதி நவீன ட்ரோன்: காஷ்மீரில் தேடுதல் வேட்டை
பயங்கரவாதிகளை "தட்டி தூக்க" அதி நவீன ட்ரோன்: காஷ்மீரில் தேடுதல் வேட்டை
ADDED : ஜூலை 15, 2024 04:28 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அக்னூரில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்டறிந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அதி நவீன ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக அதி நவீன வசதி கொண்ட ட்ரோன்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று(ஜூலை 15) அக்னூரில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்டறிந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அதி நவீன ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைபொருட்களும் கடத்தப்படுகிறது. இதனையும் அதி நவீன வசதி கொண்ட ட்ரோனை கொண்டு கண்காணிக்கப்பட உள்ளது.