ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவரின் மகன் கொலை
ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவரின் மகன் கொலை
ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவரின் மகன் கொலை
ADDED : ஜூன் 24, 2024 04:40 AM
ஹூப்பள்ளி, : ஹூப்பள்ளியின் லோஹியா நகரின் பவன் பள்ளியின் பின்புறத்தில் வசித்தவர் ஆகாஷ் மடபதி, 25. இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றினார். இவரது தந்தை சேகரய்யா மடபதி, ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க தலைவராக இருக்கிறார்.
ஆகாஷ், நேற்று முன் தினம், லோஹியா நகரின், பின் புறம் மிட்மேக் லே - அவுட்டில் நண்பர்களுடன் இருந்தார். அப்போது, அவர்களிடையே ஏதோ காரணத்தால் சண்டை நடந்தது. அப்போது ஆகாஷை தாக்கினர். இதில் காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந்தார்.