முதல்வராக சித்தராமையா நீடிப்பார்; ஆட்டத்தை துவங்கிய ராஜண்ணா
முதல்வராக சித்தராமையா நீடிப்பார்; ஆட்டத்தை துவங்கிய ராஜண்ணா
முதல்வராக சித்தராமையா நீடிப்பார்; ஆட்டத்தை துவங்கிய ராஜண்ணா
ADDED : ஜூன் 12, 2024 12:00 AM

துமகூரு,: ''முதல்வராக சித்தராமையா நீடிப்பார்,'' என்று, அமைச்சர் ராஜண்ணா கொளுத்தி போட்டு உள்ளார்.
கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா துமகூரில் நேற்று அளித்த பேட்டி:
உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற, ஜாதி அடிப்படையில் கூடுதலாக மூன்று துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும். அப்படி செய்தால் கட்சிக்கு அனுகூலமாக இருக்கும்.
லோக்சபா தேர்தல் முடியும் வரை, முதல்வர், துணை முதல்வர் பதவி பற்றி பேசக்கூடாது என்று, எங்கள் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, என்னிடம் கேட்டு கொண்டார். இதனால் அமைதியாக இருந்தேன். தேர்தல் முடிந்து விட்டது. இனி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவேன்.
மாநிலத்தில் முதல்வர் இருக்கை காலியாக இல்லை. சித்தராமையா முதல்வராக நீடிப்பார். ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்து, என்னை மாற்றினால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தேவைப்பட்டால் என்னை மாற்றி கொள்ளட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வரின் ஆதரவாளரான ராஜண்ணாவுக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், முதல்வர் பதவியை பெற சிவகுமார் 'பிளான்' வைத்து இருந்தார். ஆனால் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் உங்களுக்கு முதல்வர் பதவி கிடைக்காது என்று, சிவகுமாருக்கு உணர்த்தும் வகையில், சித்தராமையா முதல்வராக நீடிப்பார் என்று, ராஜண்ணா கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
***