Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சட்டவிரோத பாகிஸ்தானியர் குறித்து அதிர்ச்சி தகவல்

சட்டவிரோத பாகிஸ்தானியர் குறித்து அதிர்ச்சி தகவல்

சட்டவிரோத பாகிஸ்தானியர் குறித்து அதிர்ச்சி தகவல்

சட்டவிரோத பாகிஸ்தானியர் குறித்து அதிர்ச்சி தகவல்

ADDED : மார் 12, 2025 11:30 PM


Google News
பெங்களூரு : நான்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக வசித்த 22 பாகிஸ்தானியர் மீது தாக்கல் செய்யப்பட்ட, குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு ரூரல், ஜிகனி அருகே ராஜாபுரா கிராமத்தில் சட்டவிரோதமாக வசித்த, பாகிஸ்தான் நாட்டின் லாகூரைச் சேர்ந்த சையது தாரிக், 51, அவரது மனைவி அனிலா தாரிக், 48, இவர்களின் 13 வயது மகள் ஆகியோர், கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த அட்டையில் இந்தியர்கள் என்றும், ஹிந்து பெயர்களும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இவர்கள் கொடுத்த தகவலின்படி, கர்நாடகாவின் பிற மாவட்டங்களிலும், டில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் வசித்த மேலும் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் யாரும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதும், நேபாளத்தைச் சேர்ந்த மதகுரு ஒருவர் கூறியதன்பேரில், இந்தியாவுக்கு வந்து மதத்தை பரப்பியதும் தெரிந்தது. இவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக, ஆனேக்கல் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவை:

முக்கிய குற்றவாளி என்று ரஷீத் அலி சித்திக் என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கைதான 22 பேரும் வங்கதேசம் வழியாக நம் நாட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

முதலில் டில்லியில் தங்கி இருந்தனர். 22 பேருக்கும் போலி பிறப்பு சான்றிதழ், ஆதார், வாக்காளர் அட்டைகள், பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பர்வேஸ் அகமது எடுத்துக் கொடுத்துள்ளார்.

கைதானவர்களில் சிலர் பாஸ்போர்ட், விசாவை பயன்படுத்தி அடிக்கடி வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளனர். அனைவரின் பாஸ்போர்ட், விசா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேற்கண்டவை உட்பட பல்வேறு தகவல்கள் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us