Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஊறுகாய் வியாபாரத்தில் ஷிவமொகா வாலிபர் அமோகம்

ஊறுகாய் வியாபாரத்தில் ஷிவமொகா வாலிபர் அமோகம்

ஊறுகாய் வியாபாரத்தில் ஷிவமொகா வாலிபர் அமோகம்

ஊறுகாய் வியாபாரத்தில் ஷிவமொகா வாலிபர் அமோகம்

ADDED : ஜூன் 09, 2024 04:12 AM


Google News
Latest Tamil News
ஷிவமொகா மாவட்டம், சொரபா தாலுகா ராமகொண்டனகொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ், 45. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

வேலை தேடி பல இடங்களிலும் அலைந்துள்ளார். நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என மாதக்கணக்கில் வேலை தேடியது உண்டு. ஆனால், வேலை கிடைக்கவில்லை. இதனால், சுய தொழில் செய்ய முடிவு செய்தார்.

சொரபாவில், 2006ல் ஒரு சிறிய கடையை வாடகைக்கு எடுத்தார். அதில், 'ஓம்' என்ற பெயரில் ஊறுகாய் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில், ஆண்டுக்கு 50 - 100 கிலோ ஊறுகாய் விற்பனை செய்யப்பட்டது.

வாடிக்கையாளர்கள்


ருசி, தரத்தை பார்த்து, அதிக அளவில் வாடிக்கையாளர்கள் விரும்பினர். இதனால், வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தார். சம்பாதித்த பணத்தில், ஒரு ஏக்கர் நிலம் வாங்கி, ஊறுகாய் தயாரிப்பு தொழிற்சாலை அமைத்தார்.

தற்போது, ஆண்டுக்கு, 70,000 கிலோ ஊறுகாய் தயாரித்து, விற்பனை செய்யப்படுகிறது. 18 ஆண்டுகளில் இந்த சாதனை செய்துள்ளார். தொழிற்சாலையில் ஊறுகாய் தயாரிப்பில், 35 ஊழியர்களும், விற்பனை பிரிவில் 70 ஊழியர்களும் பணி புரிகின்றனர். அனைத்து ஊழியர்களும் உள்ளூர்காரர்கள் என்பது சிறப்பு.

தன்னிடம் வேலை தேடி வந்தவர்களை, திருப்பி அனுப்பாமல், ஏதாவது ஒரு வேலை தந்து உதவி வருகிறார். இதனால், 'ஊழியர்கள் விரும்பும் உரிமையாளராக' திகழ்கிறார்.

35 வகை ஊறுகாய்


மாங்காய், எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகு, நெல்லிக்காய், காய்கறிகள், புளிச்ச கீரை, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், தக்காளி என 35 வகையான ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்கிறார். இத்துடன், மசாலா பொருட்கள், வெல்லம் தயாரித்தும் விற்பனை செய்கிறார்.

இதுகுறித்து, கணேஷ் கூறியதாவது:

ஊறுகாய் தொழில் துவங்கிய அனைவரும் வெற்றி பெற முடியாது. நான் தொழில் ஆரம்பித்த போதும், உறவினர்கள், நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நான் விடாபிடியாக முயன்று செயல்பட்டேன்.

தரத்துக்கும், சுவைக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆரம்பம் முதல், இதுவரை அதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். நேர்மையாக செயல்படுவதால், தொழிலில் சாதனை புரிந்துள்ளோம். மாநிலம் முழுதும், எங்கள் தயாரிப்பு ஊறுகாய் கிடைக்கும்.

சாதனைக்கு ஏழ்மை தடையில்லை. என்னால், பலருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி, அவர்களின் குடும்பங்கள் வாழ்வது திருப்தி அளிக்கிறது. அதிக லாபத்தை விட, தரம் தான் மிகவும் முக்கியம் என்பதை கடைபிடிக்கிறேன்.

அனைத்து வகை ஊறுகாய்களை விட மாங்காய் ஊறுகாய்க்கு தான் அதிக மவுசு இருக்கிறது. சீசன் காலத்தில் தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா என்று மாங்காய் வாங்கி வருகிறோம். நிறைய முகவர்கள் ஆர்டர் கொடுப்பதால், அதற்கேற்றவாறு தயாரித்து கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us