இஸ்ரேல் தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
இஸ்ரேல் தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
இஸ்ரேல் தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
ADDED : ஆக 03, 2024 09:06 PM

புதுடில்லி:உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, புதுடில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே போர் நடக்கிறது.
ஹமாஸ் தலைவரும், பாலஸ்தீன முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹானியா, கடந்த 31ம் தேதி கொல்லப்பட்டார்.
இந்நிலையில், புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் மற்றும் சாபாத் மாளிகை ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, தலைநகர் டில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் சாபாத் மாளிகை ஆகிய இடங்களில் டில்லி மாநகரப் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
இரண்டு கட்டிடங்களைச் சுற்றிலும் ஏற்கனவே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில், டில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இரண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதல்களில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.