டில்லியில் 20 பயிற்சி மையங்களுக்கு ‛ சீல் '
டில்லியில் 20 பயிற்சி மையங்களுக்கு ‛ சீல் '
டில்லியில் 20 பயிற்சி மையங்களுக்கு ‛ சீல் '
ADDED : ஜூலை 29, 2024 11:04 PM

புதுடில்லி: டில்லியில் பயிற்சி மையத்தில் மழைநீர் தேங்கியதில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் எதிரொலியாக டில்லியில் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் சீல் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ராஜேந்திரா நகரில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள் அதிர்ச்சியில் வெளியேறினர். சிலர் தப்பினர் 10க்கும் மேற்பட்டோர் வெளியே வர முடியாமல் தவித்தனர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. இதில் 3 மாணவர்கள் பலியாகினர்.
இந்நிலையில் டில்லி சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் விதிகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 20-க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.
இது குறித்து டில்லி மாநகாட்சி கமிஷனர் அஷ்வினி குமார் கூறியது, டில்லி ராஜேந்திரா நகர் பயிற்சி மைய சம்பவத்தை தொடர்ந்து டில்லி முகர்ஜி நகர், ராஜிந்தர் நகர், நேரு விஹார், வர்தமான் மால் உள்ளிட்ட பல்வேறு இடங்களி்ல் சட்டவிரோதமாக செய்யல்பட்டு வந்த 20க்கும் மேற்பட்ட பயிற்சி மைய கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பயிற்சி மைய கட்டடங்கள் இடித்து தள்ளப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.