வயநாடு நிலச்சரிவில் சாம்ராஜ் நகர் குடும்பங்கள் மாயம்: மீட்பு பணிக்கு கர்நாடக குழு
வயநாடு நிலச்சரிவில் சாம்ராஜ் நகர் குடும்பங்கள் மாயம்: மீட்பு பணிக்கு கர்நாடக குழு
வயநாடு நிலச்சரிவில் சாம்ராஜ் நகர் குடும்பங்கள் மாயம்: மீட்பு பணிக்கு கர்நாடக குழு

இது குறித்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, டில்லியில் நேற்று கூறியதாவது:
வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கர்நாடகா சார்பில் இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். மாநில அரசு சார்பில், மீட்பு பணிக்காக ஜே.சி.பி., கிரேன் உட்பட 15 கனரக வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
2 பெண்கள் பலி
மெப்படி பகுதியில் நடந்த நிலச்சரிவில் சாம்ராஜ் நகரை சேர்ந்த புட்டசித்தி உட்பட இரண்டு பெண்கள் பலியாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்று, ராஜன் -- ரஜினி என்ற தம்பதியும் காணாமல் போனதாக சாம்ராஜ் நகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொலைபேசி எண்கள்
சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் பலரும் வயநாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அத்தகையோர் காணாமல் போனால், யாருக்காவது தகவல் தெரிந்தால், 08226 223161/63/60 ஆகிய தொலைபேசி எண்களிலும்; 9740942902 என்ற, 'வாட்ஸாப்' எண்ணிலும் 24 மணி நேரமும் தகவல் அளிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.