ADDED : ஜூன் 01, 2024 06:39 AM

தாவணகெரே: காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான சாமனுார் சிவசங்கரப்பா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தாவணகெரே தெற்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா, 94. இவர், வீரசைவ லிங்காயத் சங்க தலைவராகவும் உள்ளார்.
திடீரென நேற்று அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக, தாவணகரே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
'சளி பிரச்னை காரணமாக, சிகிச்சை பெற்று வரும் சிவசங்கரப்பாவின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. கவலைப்பட வேண்டாம்' என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.