ரூ. 30 கோடி போதை பொருள் கடத்தல் : ஜெர்மன் வாழ் இந்தியர் கைது
ரூ. 30 கோடி போதை பொருள் கடத்தல் : ஜெர்மன் வாழ் இந்தியர் கைது
ரூ. 30 கோடி போதை பொருள் கடத்தல் : ஜெர்மன் வாழ் இந்தியர் கைது
ADDED : ஜூலை 26, 2024 02:15 AM

புதுடில்லி: டில்லி சர்வதேச விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தி வந்ததாக ஜெர்மன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரை சி.பி.ஐ. கைது செய்து விசாரித்து வருகிறது.
கத்தாரின் தோகாவிலிருந்து இண்டிகோ விமானம் 6 இ1308 விமானம் மூலம் கோகைன் போதை பொருள் கடத்தி வருவதாக சி.பி.ஐ.,க்கு ரகசிய தகவல் கிடைத்தையடுத்து டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
இதில் சந்தேகத்தின் பேரில் ஜெர்மன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரிடம் நடத்திய சோதனையில் 6 கி.கி. கோகைன் போதை பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை சி.பி.ஐ.,போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 30 கோடி என கூறப்படுகிறது.