ஓடையில் மரக்கிளையை பிடித்து 10 மணி நின்ற மூதாட்டி மீட்பு
ஓடையில் மரக்கிளையை பிடித்து 10 மணி நின்ற மூதாட்டி மீட்பு
ஓடையில் மரக்கிளையை பிடித்து 10 மணி நின்ற மூதாட்டி மீட்பு
ADDED : ஜூலை 17, 2024 10:24 PM

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப் பாலம் பனமண்ணை பகுதியை சேர்ந்தவர் சந்திரமதி, 79. இவர், நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு வீட்டின் அருகே உள்ள ஓடையில் குளிக்கச் சென்றார். அவர் குளிக்க சென்றது, குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாது. குளித்து கொண்டிருந்த போது, அந்த முதிய பெண், நிலை தவறி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய ஓடையில் விழுந்தார்.
ஓடை நீரில் அடித்து செல்லப்பட்ட அவர், ஓடையில் சாய்ந்து நின்ற மரக்கிளையை பிடித்து நின்றார். இவ்வாறாக, 10 மணி நேரத்துக்கும் மேலாக, தைரியமாக நின்று கொண்டே இருந்தார்.
இதற்கிடையே, மாலை, 4:00 மணிக்கு ஓடையின் மறுபக்கம், அவரை தேடி கொண்டிருந்த உறவினர்கள், சந்திரமதி ஓடையில் மரக்கிளையை பற்றிக்கொண்டு இருப்பதை கண்டு, உடனடியாக கயிறு போட்டு அவரை கரை ஏற்றி, காப்பாற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.