கல்லால் அடித்து கொல்லணும் ரேணுகாசாமி தந்தை ஆவேசம்
கல்லால் அடித்து கொல்லணும் ரேணுகாசாமி தந்தை ஆவேசம்
கல்லால் அடித்து கொல்லணும் ரேணுகாசாமி தந்தை ஆவேசம்
ADDED : ஜூன் 24, 2024 05:11 AM
சித்ரதுர்கா: ''என் மகனை கொலை செய்த குற்றவாளிகளை, பொது இடத்தில் நிறுத்தி கல்லால் அடித்து கொல்ல வேண்டும்,'' என ரேணுகாசாமியின் தந்தை காசி நாதைய்யா வலியுறுத்தினார்.
சித்ரதுர்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
என் மகனை கொன்றவர்களுக்கு, ஆயுள் தண்டனையை விட அதிகமான தண்டனை கிடைக்க வேண்டும். குற்றவாளிகளை பொது இடத்தில் நிறுத்தி, கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.
என் மகனை கொன்றவர்களுக்கு, சிறை தண்டனை கிடைத்ததாக, நீங்கள் கூறுகிறீர்கள். நாங்கள் 'டிவி' பார்ப்பதில்லை; நாளிதழ்கள் படிப்பதில்லை. இதை பார்க்கவே எங்களுக்கு இம்சையாக உள்ளது. என் மகன் எவ்வளவு வலியை அனுபவித்தானோ, அதே அளவு வலியை தர்ஷனும், மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும். அதே போன்று காயங்கள் ஏற்பட வேண்டும்.
எந்தெந்த ஆயுதங்களால், என் மகனை தாக்கினரோ, அதே ஆயுதங்களால் கொலையாளிகளை தாக்க வேண்டும். பொது மக்களின் முன், கல்லால் அடித்து கொல்ல வேண்டும். ஊடகத்தினர் மற்றும் அரசின் கடும் நடவடிக்கையால், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என, நம்புகிறேன்.
இவ்வாறு அவர்கூறினார்.