சொன்ன சொல்லை காப்பாற்றிய மானஸ்தர்: தோல்விக்காக பெயரை மாற்றிய ரெட்டி
சொன்ன சொல்லை காப்பாற்றிய மானஸ்தர்: தோல்விக்காக பெயரை மாற்றிய ரெட்டி
சொன்ன சொல்லை காப்பாற்றிய மானஸ்தர்: தோல்விக்காக பெயரை மாற்றிய ரெட்டி
UPDATED : ஜூன் 22, 2024 04:23 AM
ADDED : ஜூன் 21, 2024 11:59 PM

பிதாபுரம் :சட்டசபை தேர்தலில் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் வெற்றி பெற்றால், தன் பெயரை மாற்றிக் கொள்வதாக கூறிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் அமைச்சர், சொன்னது போல் தன் பெயரை மாற்றிக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் தொகுதியில் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர்.காங்.மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான வங்கா கீதா களமிறங்கினார். இதில், 65,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் பவன் கல்யாண் வெற்றி பெற்றார்.
தேர்தல் பிரசாரத்தின் போது, வங்கா கீதாவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் முத்ரகடா பத்மநாபம், பவன் கல்யாண் வெற்றி பெற்றால், தன் பெயரை மாற்றிக் கொள்வதாக சவால் விடுத்தார்.
இந்நிலையில், தன் பெயரை அதிகாரப்பூர்வமாக பத்மநாப ரெட்டி என அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பத்மநாப ரெட்டி கூறுகையில், 'என் பெயரை மாற்றும்படி யாரும் வற்புறுத்தவில்லை. என் சொந்த விருப்பத்தின் படியே நான் அதை மாற்றினேன். 'இருப்பினும், ஜனசேனா தலைவரின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் எனக்கு தவறான குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பினர்' என்றார்.