பத்ராவதி இரும்பு ஆலை மீட்பு; குமாரசாமிக்கு காங்., கேள்வி
பத்ராவதி இரும்பு ஆலை மீட்பு; குமாரசாமிக்கு காங்., கேள்வி
பத்ராவதி இரும்பு ஆலை மீட்பு; குமாரசாமிக்கு காங்., கேள்வி
ADDED : ஜூன் 12, 2024 12:18 AM

பெங்களூரு : 'பத்ராவதி இரும்பு ஆலையை மூட, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அந்த ஆலையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பீர்களா' என்று, மத்திய கனரக தொழிற்சாலைகள், உருக்கு துறை அமைச்சர் குமாரசாமிக்கு, காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.,யாக இருப்பவர் ஜெய்ராம் ரமேஷ். இவர் நேற்று தனது, 'எக்ஸ்' பக்கத்தில், மத்திய கனரக தொழிற்சாலைகள், உருக்கு துறை அமைச்சர் குமாரசாமிக்கு ஐந்து கேள்விகளை முன்வைத்தார்.
l துரு பிடித்த அரசியல் உருக்கு துறை அமைச்சராக உள்ளீர்கள். விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை விற்க மாட்டோம் என்று, உறுதிமொழி கொடுப்பீர்களா?
l ஷிவமொகா பத்ராவதியில் செயல்பட்டு வரும், விஸ்வேஸ்வரய்யா இரும்பு தொழிற்சாலையை மூட, மத்திய அரசு முன்கூட்டியே முடிவு செய்தது. அந்த ஆலையை மீட்டெடுக்க, அவசர கால நடவடிக்கை எடுப்பீர்களா?
l சேலம் உருக்காலை தொழிலாளர்களை காக்க நீங்கள் தயாரா?
l நாகர்கனார் ஸ்டீல் தயாரிப்பு மையத்தை, பிரதமர் மோடி தனது நண்பர்களுக்கு விற்க மாட்டார் என்று, வாக்குறுதி அளிப்பீர்களா?
l மேற்கு வங்கம் துர்காபூரில் உள்ள, அலாய் ஸ்டீல் ஆலையை விற்க மாட்டோம் என உறுதி அளிப்பீர்களா?
மேற்கண்ட தொழிற்சாலைகளை நம்பி, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இதனால் ஆலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று, குமாரசாமி உறுதிமொழி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.