கருத்து கணிப்பை ஏற்காத காங்., ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி
கருத்து கணிப்பை ஏற்காத காங்., ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி
கருத்து கணிப்பை ஏற்காத காங்., ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி
ADDED : ஜூன் 02, 2024 09:39 PM

தார்வாட்: 'கர்நாடக சட்டசபை தேர்தலில் கருத்து கணிப்பை ஏற்றுக் கொண்டவர்கள், லோக்சபா கருத்தை ஏற்க மறுக்கின்றனர்,'' என பா.ஜ., முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று, 'எக்ஸிட் போல்' எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறியுள்ளன.
இது குறித்து, ஹூப்பள்ளியில் நேற்று ஜெகதீஷ் ஷெட்டர் அளித்த பேட்டி:
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். கருத்து கணிப்புகளில், தெளிவான பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. 400 இடங்களுக்கு மேல் பா.ஜ., வெற்றி பெறும்.
கடந்தாண்டு சட்டசபை தேர்தலில் கருத்து கணிப்புகள், காங்கிரசுக்கு சாதகமாக அமைந்தன. அதை ஒப்புக் கொண்டவர்கள், தற்போதைய கருத்து கணிப்பை ஏற்க மறுக்கின்றனர். தோல்வியை ஏற்க முடியாமல் சாக்கு போக்கு சொல்கின்றனர். பெரும்பாலான கருத்து கணிப்புகள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளன.
பெலகாவியில் மக்களின் ஆசியுடன் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். அரசியல் அமைப்பை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அதை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை.
லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், கர்நாடக காங்கிரஸ் அரசில் உட்கட்சி பூசல் வெடிக்கும். இந்த அரசு, தானாகவே கலையும். பா.ஜ., ஆப்பரேஷன் தாமரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.