சிக்கிம் முதல்வராக மீண்டும் பிரேம் சிங் தமாங் பதவியேற்பு
சிக்கிம் முதல்வராக மீண்டும் பிரேம் சிங் தமாங் பதவியேற்பு
சிக்கிம் முதல்வராக மீண்டும் பிரேம் சிங் தமாங் பதவியேற்பு
ADDED : ஜூன் 11, 2024 01:15 AM

கேங்டாக், சிக்கிம் மாநில முதல்வராக பிரேம் சிங் தமாங், 56, நேற்று மீண்டும் பதவியேற்றார்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது.
இதில், ஆளுங்கட்சியான சிக்கிம் கிராந்திகரி மோர்சா, மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 31ஐ கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. கடந்த முறை இந்த கட்சி, 17 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
கடந்த 2019ம் ஆண்டு வரை, 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி, இந்த சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதி மட்டுமே வென்றது.
இதன் வாயிலாக சிக்கிம் கிராந்திகரி மோர்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங், மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, பிரேம் சிங் தமாங்குக்கு, மாநில கவர்னர் லக்ஷமன் பிரசாத் ஆச்சாரியா நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரண்டாவது முறையாக முதல்வர் பதவியேற்ற பிரேம் சிங் தமாங்குக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.