பூங்கொத்து, சால்வை வேண்டாம் பிரஹலாத் ஜோஷி உத்தரவு
பூங்கொத்து, சால்வை வேண்டாம் பிரஹலாத் ஜோஷி உத்தரவு
பூங்கொத்து, சால்வை வேண்டாம் பிரஹலாத் ஜோஷி உத்தரவு
ADDED : ஜூலை 15, 2024 04:39 AM

தார்வாட் : 'என்னை சந்திக்க வருவோர் பூங்கொத்து, சால்வை, மாலை கொண்டு வர வேண்டாம்,' என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
என் ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள் என யார் என்னை சந்திக்க வந்தாலும், பூங்கொத்து கொண்டு வர வேண்டாம். மேலும், வெவ்வேறு சமுதாயங்களை சேர்ந்த பிரமுகர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், சால்வை, மாலை, கொண்டு வந்து எனக்கு அணிவிக்க வேண்டாம்.
மாணவர்களுக்கு பயன்படும் வகையில், புத்தகங்கள், நோட்டு புத்தகங்களை வழங்கி உதவுங்கள். இதனால், மாணவர்களின் எதிர்காலம் நன்றாக அமைய உதவிக்கரம் நீட்டுவோம்.
மாலை, பூங்கொத்து, சால்வைகள் பயன்படுத்த முடியாது. ஆனால், புத்தகங்கள் மாணவர்களின் கல்விக்கு உதவும். எனவே தயவு செய்து, என் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று, முதல்வர் சித்தராமையாவும் தான் பதவி ஏற்றதும், புத்தகங்களை தவிர, வேறு எதுவும் தன்னை சந்திக்க வருபவர்கள் கொண்டு வர வேண்டாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.