திருப்பதியில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம்
திருப்பதியில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம்
திருப்பதியில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம்
ADDED : ஜூலை 12, 2024 02:06 AM
திருப்பதி, ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த திருமலையில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடையாமல் இருக்க பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை பொருட்கள், மதுபானங்கள் ஆகியவற்றுக்கு திருமலையில் தடை உள்ளது.
இந்நிலையில் திருப்பதி, திருச்சானுார், ரேணிகுண்டா நகரில் பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தும் படி எஸ்.பி., ஹர்ஷவர்தன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பள்ளி, கல்லுாரி அருகே 100 மீட்டருக்குள் உள்ள கடைகளில் பீடி, சிகரெட், பான்மசாலா, குட்கா போன்றவை விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று பொது இடங்களில் புகை பிடித்தவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி அருகே உள்ள கடைகளில் பீடி, சிகரெட் விற்றவர்கள் ஆகியோருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.