து ணை எஸ்.பி., மீது பரமேஸ்வர் கோபம்
து ணை எஸ்.பி., மீது பரமேஸ்வர் கோபம்
து ணை எஸ்.பி., மீது பரமேஸ்வர் கோபம்
ADDED : ஜூலை 11, 2024 05:31 AM
துமகூரு, : துமகூரு மதுகிரியின் கொடிகேனஹள்ளி கிராமத்தில் புதிதாக போலீஸ் நிலையம் கட்டப்பட்டது. இதை திறந்து வைக்க, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், நேற்று காலை சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின், துமகூரு நகர் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த, ஐ.டி., - பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவை சந்திக்க, மெய்க்காவல் படையுடன் பரமேஸ்வர் காரில் புறப்பட்டார்.
துமகூரு - கொரட்டகெரே நெடுஞ்சாலையில் வரும் எல்லாபுரா கிராமத்தில் திருவிழா நடந்தது. எனவே துமகூரு நகர துணை எஸ்.பி., சந்திரசேகர், நெடுஞ்சாலையில் செல்வதை தவிர்த்து, மாற்றுப் பாதையில் அமைச்சரை அழைத்து வந்தார்.
ஊரை சுற்றி அழைத்து வந்ததால், கொதிப்படைந்த அமைச்சர் பரமேஸ்வர், “நெடுஞ்சாலையில் திருவிழா நடத்த அனுமதி கொடுத்தது யார்?” என, கேட்டு துணை எஸ்.பி.,யை கண்டித்தார்.