வாகமண்ணில் பாராகிளைடிங் திருவிழா மார்ச் 19 முதல் மார்ச் 23 வரை நடக்கிறது
வாகமண்ணில் பாராகிளைடிங் திருவிழா மார்ச் 19 முதல் மார்ச் 23 வரை நடக்கிறது
வாகமண்ணில் பாராகிளைடிங் திருவிழா மார்ச் 19 முதல் மார்ச் 23 வரை நடக்கிறது
ADDED : மார் 15, 2025 02:34 AM
மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் வாகமண்ணில் சர்வதேச அளவில் பாராகிளைடிங் திருவிழா மார்ச் 19ல் துவங்கி மார்ச் 23 வரை ஐந்து நாட்கள் நடக்கிறது.
மாநில சுற்றுலாதுறையின் கீழ் செயல்படும் கேரள சாகச சுற்றுலா மேம்பாட்டு சங்கம், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு, இந்தியா ஏரோ கிளப், ஆரஞ்ச் லைப் பாராகிளைடிங் பள்ளி தொழில் நுட்ப உதவியுடன் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய வான்வெளி சாகச விளையாட்டாக கருதப்படும் இத்திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நேபாளம், பெல்ஜியம், ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகள், தமிழகம், டில்லி, கோவா, மஹாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, சிக்கிம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சர்வதேச, தேசிய அளவில் பிரபலமான நுாற்றுக்கும் மேற்பட்ட கிளைடர்கள் பங்கேற்கின்றனர். பாராகிளைடிங் சாகச போட்டிகளும் நடக்கின்றன. முதல்பரிசு ரூ.1.5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விழா வாகமண்ணின் பாராகிளைடிங் திறன், கேரளாவின் சாகச சுற்றுலா ஆகியவற்றை சர்வதேச அளவில் வெளிப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனுடன் வாகமண் சுற்றுலா திருவிழாவையும் நடத்த ஆலோசிக்கப்பட்டது.
பீர்மேடு எம்.எல்.ஏ. வாழூர் சோமன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பினு, மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழக செயலர் ஜிதேஷ் ஜோஸ், பீர்மேடு டி.எஸ்.பி. விஷால் ஜான்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.