எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் சூரிய மின்சக்தி வரி குறைப்பு
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் சூரிய மின்சக்தி வரி குறைப்பு
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் சூரிய மின்சக்தி வரி குறைப்பு
ADDED : ஜூலை 12, 2024 02:10 AM

திருவனந்தபுரம், கேரளாவில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான எரிசக்தி வரி, நீதிமன்ற முத்திரை கட்டணம் ஆகியவற்றை குறைப்பதற்கான நிதி மசோதா, அந்த மாநில சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சூரிய ஒளி மின் உற்பத்திக்கான எரிசக்தி வரி 1.20 பைசாவில் இருந்து 15 பைசாவாக உயர்த்தப்பட்டது.
இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த வரி உயர்வு, வீட்டு மேற்கூரைகளில் சோலார் தகடுகளை பொருத்தியவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, வரி உயர்வுக்கு விலக்கு அளிக்கும் நிதி மசோதா நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக, சூரிய ஒளி மின் உற்பத்திக்கு உயர்த்தப்பட்ட வரி குறைக்கப்பட்டது.
இதேபோல், குடும்ப நல நீதிமன்றங்களில் சொத்து தொடர்பான வழக்குகளுக்கான முத்திரை கட்டணமும் குறைக்கப்பட்டது.
வீடு வாடகை, குத்தகை ஒப்பந்தங்கள் மீதான முத்திரை வரி, பெரிய சுற்றுலா பஸ்களுக்கான மூன்று மாத சாலை வரி உள்ளிட்டவையும் குறைக்கப்பட்டுள்ளன.