அசுத்த நீர் குடித்து ஒருவர் உயிரிழப்பு
அசுத்த நீர் குடித்து ஒருவர் உயிரிழப்பு
அசுத்த நீர் குடித்து ஒருவர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 25, 2024 04:55 AM
கோலார் : மிஞ்சேனஹள்ளி கிராமத்தில் அசுத்தமான நீரை குடித்ததால் ஒருவர் உயிரிழந்தார். ஏழு பேர் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
கோலார் மாவட்டம், முல்பாகலின் ஊருகுன்டே கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது மிஞ்சேனஹள்ளி கிராமம். இங்கு கிராம பஞ்சாயத்து தொட்டியில் இருந்து, வீடுகளுக்கு குழாய் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில நாட்களாக தண்ணீர் அசுத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை பயன்படுத்தியதில், கிராமத்தின் எட்டு பேர் உடல் நிலை பாதிப்படைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் வெங்கட ரமணப்பா, 50, உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
தகவலறிந்து அங்கு வந்த, கிராம பஞ்சாயத்து அதிகாரிகள், தண்ணீரை ஆய்வு செய்கின்றனர். தண்ணீர் மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மா கூறுகையில், ''கிராமத்தில் சிலர் பாதிப்படைந்துள்ளது உண்மைதான். ஆனால் குடிநீரில் பிரச்னை இல்லை. அசுத்தமாகவும் இல்லை. சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்,'' என்றார்.