Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மேலும் ஒரு எம்.எல்.ஏ., காங்.கில் ஐக்கியம்: காலியாகிறது பி.ஆர்.எஸ்., கூடாரம்

மேலும் ஒரு எம்.எல்.ஏ., காங்.கில் ஐக்கியம்: காலியாகிறது பி.ஆர்.எஸ்., கூடாரம்

மேலும் ஒரு எம்.எல்.ஏ., காங்.கில் ஐக்கியம்: காலியாகிறது பி.ஆர்.எஸ்., கூடாரம்

மேலும் ஒரு எம்.எல்.ஏ., காங்.கில் ஐக்கியம்: காலியாகிறது பி.ஆர்.எஸ்., கூடாரம்

ADDED : ஜூலை 12, 2024 08:13 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஐதராபாத்: தெலங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் 7-வது எம்.எல்.ஏ., இன்று காங். கட்சியில் ஐக்கியமானதை தொடர்ந்து அக்கட்சியின் கூடாம் காலியாகிறது.

தெலங்கானாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 119 இடங்களில் காங்., 64 இடங்களிலும், பி.ஆர்.எஸ். கட்சி 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து பெரும்பான்மை பெற்ற காங். ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக ரேவந்த்ரெட்டி உள்ளார்.

இந்நிலையில் சமீப காலமாக தெலங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்.எல்.ஏ.க்களின் கட்சி தாவும் படலம் தொடர்கதையாகி வருகிறது.

இன்று அக்கட்சியைச் சேர்ந்த கட்வால் தொகுதி எம்.எல்.ஏ., பண்டல கிருஷ்ண மோகன் ரெட்டி, முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங். கட்சியில் ஐக்கியமானார். இதன் மூலம் காங்.கில் இணைந்த பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த 7 வது எம்.எல்.ஏ. ஆவார்.

இதுவரை பி.ஆர்.கட்சியிலிருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் மாற்று கட்சிக்கு தாவிய நிலையில் இன்று ஏழாவதாக ஒரு எம்.எல்.ஏ., காங்.கில் ஐக்கியமானர்.

இதையடுத்து பி.ஆர்.எஸ். கட்சி கூடாரம் காலியாகிறது. சந்திரசேகரராவிற்கு பின்டைவை ஏற்படுத்தி வருகிறது

கட்சியை காங்.குடன் இணைக்க ராவ் முடிவு ?


முன்னதாக பி.ஆர்.எஸ். கட்சி வட்டாரங்கள் கூறுகையில், அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் ஓட்டமெடுப்பதால் பி.ஆர்.எஸ். கட்சியை காங்கிரசுடன் இணைத்துவிடலாமா என அக்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகரராவ் ஆலோசித்து வருகிறார் எனவும், விரைவில் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us