ஒடிசா பி.ஜே.டி.மாஜி ராஜ்யசபா எம்.பி., இன்று பா.ஜ.வில் ஐக்கியம்
ஒடிசா பி.ஜே.டி.மாஜி ராஜ்யசபா எம்.பி., இன்று பா.ஜ.வில் ஐக்கியம்
ஒடிசா பி.ஜே.டி.மாஜி ராஜ்யசபா எம்.பி., இன்று பா.ஜ.வில் ஐக்கியம்
UPDATED : ஆக 01, 2024 09:01 PM
ADDED : ஆக 01, 2024 08:47 PM

புவனேஸ்வரம்: ஒடிசாவின் பிஜூ ஜனதா தள கட்சியின் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்த முன்னாள் பெண் எம்.பி. மம்தா மொகந்த் இன்று பா.ஜ.வில் ஐக்கியமானார்.
இம்மாநிலத்திற்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து கட்சியின் முக்கிய தலைவர்கள் நவீன்பட்நாயக் மீது அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில் இக்கட்சியின் ராஜ்யசபா பெண் எம்.பி., மம்தா மொகந்த் நேற்று(31.07.2024) திடீரென எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இவர் பிஜூ ஜனதா தளத்தின் செல்வாக்கு மிக்க குடுமி பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவார். தனது ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரிடம் அளித்துவிட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று ( ஆக.,01) டில்லி சென்று ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பா.ஜ. லோக்சபா எம்.பி. பிரதீப் பனிகிராகி தேசிய செயலாளர் அருண்சிங், ஒடிசா பா.ஜ. மாநில தலைவர் விஜய்பால்சிங்தோம் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.வில் ஐக்கியமானார்.