போதைப்பொருள் விற்பனை நைஜீரிய பிரஜை மீண்டும் கைது
போதைப்பொருள் விற்பனை நைஜீரிய பிரஜை மீண்டும் கைது
போதைப்பொருள் விற்பனை நைஜீரிய பிரஜை மீண்டும் கைது
ADDED : ஜூலை 19, 2024 01:53 AM
துவாரகா: டில்லியின் துவாரகாவில் போதைப்பொருள் விற்று வந்த நைஜீரிய பிரஜையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
துவாரகா பகுதியில் போதைப்பொருள் பரிமாற்றம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புதன்கிழமை அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்து சோதனையிட்டபோது, அவரிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் அவர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆர்தர் இபியானி மதுவாகுவானா, 40, என்றும் 2015 முதல் டில்லியில் வசித்து வருவதும் தெரிய வந்தது. பாலம் மேம்பாலம் அருகே ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கிய அவர், துவாரகாவுக்கு அருகில் உள்ள மற்றொரு நைஜீரிய பிரஜையிடம் அதை வழங்க திட்டமிட்டிருந்தார்.
போதைப்பொருள் பரிமாற்ற வழக்கில் மும்பையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட மதுவாகுவானா, பின்னர் ஜாமினில் வெளியே வந்து டில்லியில் தலைமறைவாக இருந்துள்ளார். அவரிடம் மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.