காதலியை கொன்று புதரில் வீசிய காதலனுக்கு வலை
காதலியை கொன்று புதரில் வீசிய காதலனுக்கு வலை
காதலியை கொன்று புதரில் வீசிய காதலனுக்கு வலை
ADDED : ஜூலை 27, 2024 11:52 PM

மும்பை: மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள உரன் நகரத்தைச் சேர்ந்தவர் யாஷாஸ்ரீ ஷிண்டே, 20. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வந்த இவர், இளைஞன் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உரன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள புதரில் இருந்து இறந்த நிலையில், யாஷாஸ்ரீயின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
உடலில் பல இடங்களில் ஆழமான கத்திக்குத்து காயங்கள் இருப்பதைக் கண்டறிந்த போலீசார், கொலைவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், காதல் விவகாரத்தில், யாஷாஸ்ரீயின் காதலன் அவரைக் கொன்று புதரில் வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மாயமான அவரை, தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.